விஷேச நாட்களில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது
- வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
- விசேஷ நாட்களில் மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி இயக்கப்படும் பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும்.
திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
வரும் 24ம் தேதி முதல் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.