தமிழ்நாடு

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய வடமாநில சிறுவன் உள்பட 4 பேரை பிடிக்க தனிப்படை

Published On 2023-11-27 06:11 GMT   |   Update On 2023-11-27 06:11 GMT
  • கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
  • இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருச்சி:

திருச்சி கீழபுலிவார்டு ரோடு, வி.என்.நகரில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்கள், சிறுமிகள் தங்க வைக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த, ஒடிசா மாநிலம் ரய்டா காந்தி நகரை சேர்ந்த மனோஜ்(வயது 16), ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்(16), காஞ்சிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோனீஸ் கார்த்திக்(16), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பாண்டி(16) ஆகியோர் இரவு நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

காப்பக வார்டன் இரவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவரது கையில் இருந்த சாவியை பிடுங்கி கொண்டு கேட் பூட்டை திறந்து ஓடியுள்ளனர். கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய சிறுவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News