தமிழ்நாடு

அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு.. மாணவர் அமைப்பினர் போராட்டம்

Published On 2024-09-06 03:58 GMT   |   Update On 2024-09-06 03:58 GMT
  • மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.
  • பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாணவர் அமைப்பினர் கோரிக்கை.

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகாவிஷ்ணு என்பவர் அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்ற அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மகாவிஷ்ணு என்பவர் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்தாக கூறி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அரசு பள்ளியில் மகாவிஷ்ணுவை பேச அனுமதித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

பள்ளியில் மகாவிஷ்ணு பேசுவதை தட்டிக்கேட்ட ஆசிரியரை மகாவிஷ்ணு அவமதிக்கும் வகையில் பேசியதாக மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பள்ளி மாணவர்களிடையே மூட நம்பிக்கை விதைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News