தமிழ்நாடு

வெள்ள நிவாரணம்- மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பிக்கள் முடிவு

Published On 2024-01-04 12:57 GMT   |   Update On 2024-01-04 12:57 GMT
  • தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.
  • மத்திய அமைச்சர்கள், மத்திய குழு ஆய்வு செய்த பின்னரும் நிவாரணத் தொகை வழங்கவில்லை.

தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்கக்கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் முடிவு செய்துள்ளனர்.

மிச்சாங் புயல், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் நேரம் கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்," மத்திய அமைச்சர்கள், மத்திய குழு ஆய்வு செய்த பின்னரும் எவ்வித நிவாரண தொகையும் பெறப்படவில்லை.

மற்ற மாநிலங்களில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டபோது குறுகிய காலத்தில் மத்திய அரசு நிவாரண நிதியை வழங்கியது.

தமிழக அரசு கோரியுள்ள ரூ.37,907.19 கோடியை உடனே வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News