தமிழ்நாடு

விஜய் கட்சி மாநாட்டில் 700 கண்காணிப்பு கேமராக்கள்- மாநாடு பணிகள் விறுவிறுப்பு

Published On 2024-10-22 07:13 GMT   |   Update On 2024-10-22 07:13 GMT
  • மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த கூடுதலாக ஒரு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
  • வாகன நிறுத்தும் இடம் மாநாடு திடலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

விக்கிரவாண்டி:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.

இக்கட்சியின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பலர், விஜய் கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர்.

அரசியல் அனுபவமிக்கவர்கள், விஜய் கட்சி ஆதரவாளர்கள் மாநாட்டுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். மாநாடு பணிகள் தொடங்கிய முதல் வாரத்தில், ஓய்வுபெற்ற ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் மாநாட்டு திடலினை நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த கூடுதலாக ஒரு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக விக்கிரவாண்டி அருகே உள்ள கீழக்கொல்லை பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளனர்.

அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவான வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வாகன நிறுத்தும் இடம் மாநாடு திடலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து தொண்டர்கள் நடந்து தான் மாநாடு திடலுக்கு வர வேண்டு. மாநாடு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், துபாய், பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள், மாநாட்டு திடலில் இரு அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாநாட்டு திடல் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேடை அலங்கரிக்கும் பணியை மாநில செயலாளர் மாநில புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டு உள் வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கினார். மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், மாநாட்டு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News