திருநெல்வேலியில் சிம்லா முத்துசோழன் போட்டி: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
- கள்ளக்குறிச்சி தொகுதியில் குமரகுரு போட்டி.
- ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் போட்டி.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகள் தவிர மீதமுள்ள 32 பாராளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
ஸ்ரீபெரும்புதூர்- பிரேம்குமார்
தருமபுரி - அசோகன்
கள்ளக்குறிச்சி-குமரகுரு
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கோவை- ராமச்சந்திரன்
திருச்சி- கருப்பையா
பெரம்பலூர்- சந்திரமோகன்
பொள்ளாச்சி- கார்த்திகேயன்
திருப்பூர் - அருணாசலம்
நீலகிரி (தனி) - லோகேஷ்
மயிலாடுதுறை - பாபு
திருநெல்வேலி- சிம்லா முத்துசோழன்
சிவகங்கை -சேவியர் தாஸ்
தூத்துக்குடி- சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி- பசிலியா நசரேத்
புதுச்சேரி- தமிழ்வேந்தன்
விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் - ராணி