தமிழ்நாடு (Tamil Nadu)

பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

Published On 2023-08-11 11:00 GMT   |   Update On 2023-08-11 11:00 GMT
  • 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு, 23846.46 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவு.
  • 15.08.2023 முதல் 13.12.2023 வரை 120 நாட்களுக்கு தேவைகேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர்களின் ஒத்திசைவினை எதிர்நோக்கி ஈரோடு மாவட்டம், 2023-2024- ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு, 23846.46 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் 15.08.2023 முதல் 13.12.2023 வரை 120 நாட்களுக்கு தேவைகேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News