தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஓய்வுபெற்ற ஆசிரியர் சிக்கினார்

Published On 2024-03-01 04:07 GMT   |   Update On 2024-03-01 06:58 GMT
  • போலீசார் தலைமை செயலகத்தில் இன்று காலை 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி சோதனை நடத்தினர்.
  • வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரகாஷ் என்பது தெரிய வந்தது.

சென்னை:

சென்னையில் உள்ள தனியார் தொலைகாட்சிக்கு இன்று காலை 7.30 மணி அளவில் மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதுபற்றி தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து போலீசார் தலைமை செயலகத்தில் இன்று காலை 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரகாஷ் என்பது தெரிய வந்தது.

மனநலம் பாதிக்கப்பட்ட அவர் சென்னை வானகரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News