தமிழ்நாடு
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25: பள்ளிகள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு
- 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை :
சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு.
* 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* 255 பள்ளிகளுக்கு 7.64 கோடி ரூபாயில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
* சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு ரூ.1.32 கோடி வழங்கப்படும்.
* சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.