நாளை முதல் நமது கனவு நனவாக வேண்டும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின்படி அரசு நிர்வாக வடிவமாக செயல்பட்டு வருகிறது.
- நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும், அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின்படி அரசு நிர்வாக வடிவமாக செயல்பட்டு வருகிறது. சமூக நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களுக்குமான சமநீதி, சமநிதியை வழங்கி தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேக பயணத்தை உறுதி செய்துள்ளது. நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் அறிவிப்பும் ஈரமுள்ளதாக இதயமுள்ளதாக இருக்கிறது.
7 பெரும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும்போது இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் காலம் விரைவில் ஏற்படும். நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும், அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது.
நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு... நாளை முதல் அது நனவாக வேண்டும்.
அனைத்து துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.