தமிழ்நாடு
நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய கூடுதல் அமைச்சர்கள் நியமனம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் உட்பட 9 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் - அமைச்சர் எ.வ. வேலு,
காயல்பட்டினம் - அமைச்சர் பி.மூர்த்தி
தூத்துக்குடி மாநகராட்சி - அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.