சாதிவாரி கணக்கெடுப்பு... சட்டசபையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் தி.மு.க. நிலைப்பாடு.
- 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது.
சென்னை:
10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
* சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்.
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் தி.மு.க. நிலைப்பாடு.
* 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது.
* மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
* தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசினர்.
அப்போது, முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்தார்.