வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை பார்வையிடும் முதலமைச்சர்...
- தொழிலதிபர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.
- முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வெளிநாட்டு பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொழிலதிபர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிப்ரவரி 5-ம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.