இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்...
- பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு!
- முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்!
சென்னை:
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்டோரும் உலகளவில் 2 லட்சத்துக்கும் மேலானோரும் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் இந்நாள் சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு!
சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்! அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்! என கூறியுள்ளார்.
பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு!#Tsunami-யால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, #ClimateChange-இன் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை…
— M.K.Stalin (@mkstalin) December 26, 2023