தமிழ்நாடு

அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்கக் கோரி 10-ந் தேதி கடலூரில் பிரேமலதா ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-04 05:29 GMT   |   Update On 2023-08-04 05:29 GMT
  • கடலூர் மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்கிறது
  • 37 மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சென்னை:

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 ரூபாய் வழங்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடகா அரசு திறக்க கோரியும், விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் வருகிற 10-ந் தேதி காலை 10 மணி அளவில் ஒருங்கிணைந்த மாவட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்கிறது.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்கிறார்.

தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி-தஞ்சாவூர், ஏ.ஆர்.இளங்கோவன்-கோவை பேராசிரியர் மகாலெட்சுமி-திருவள்ளூர் இளைஞர் அணிச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி-விழுப்புரம்.

மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத்-நாமக்கல், சுபமங்களம் டில்லிபாபு-செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பங்கேற்கிறார்கள். இதே போல் 37 மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Tags:    

Similar News