தமிழ்நாடு

வரும் 24-ந்தேதி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2024-06-19 07:56 GMT   |   Update On 2024-06-19 08:35 GMT
  • நீட்டை நடத்தியே தீருவேன் என்னும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம்.
  • ஆரம்பம் முதலே நீட் தேர்வை எதிர்த்த ஒரே இயக்கம் தி.மு.க. தான்.

சென்னை:

நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நீட்டை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து வருகிற 24-ந்தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. நீட்டை நடத்தியே தீருவேன் என்னும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம். ஆரம்பம் முதலே நீட் தேர்வை எதிர்த்த ஒரே இயக்கம் தி.மு.க. தான்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமை தாங்குகிறார். ஆர்ப்பாட்டத்தில் மாணவரணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வரும் 21-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News