தமிழ்நாடு

சென்னையில் அமலாக்கத்துறை 13 இடங்களில் அதிரடி சோதனை- ரூ.225 கோடி நிதி மோசடி எதிரொலி

Published On 2023-08-10 04:52 GMT   |   Update On 2023-08-10 04:52 GMT
  • சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மேற்கு தாம்பரம், கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்பட 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
  • இன்று காலை 7 மணியளவில் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை தொடங்கியது.

சென்னை:

சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் செயல்படுகிறது.

இந்த நிறுவனம் ரூ.225 கோடி வங்கி நிதியை மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிதி மோசடியில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறையும் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் வால்டர் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆரோக்கிய சாமி ஜேம்ஸ் வால்டர் நிறுவனத்தில் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மேற்கு தாம்பரம், கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்பட 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டரின் நிறுவனம் தொடர்பான அலுவலகங்கள், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணியளவில் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை தொடங்கியது.

ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டர் வீடு மற்றும் நிறுவனம் அண்ணாநகரில் ஒருவரது வீட்டின் மாடியில் செயல்பட்டுள்ளது. அதன் பிறகு சமீபத்தில் அமைந்தகரைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News