தமிழ்நாடு (Tamil Nadu)

வாரஇறுதியில் அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை

Published On 2024-06-08 04:26 GMT   |   Update On 2024-06-08 04:26 GMT
  • தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
  • தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னை:

தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. இதே போல் வெள்ளி விலையும் உயர்ந்துக்கொண்டே வந்தது.

இந்த நிலையில், வாரஇறுதி நாளான இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்குரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.6,650-க்கும் சவரன் ரூ.53,200-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 96 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News