தமிழ்நாடு

பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு எதிரொலி... அதிரடியாக குறைந்த தங்கம் விலை

Published On 2024-07-23 09:37 GMT   |   Update On 2024-07-23 09:37 GMT
  • பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது.
  • தங்கம் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

சென்னை:

பாராளுமன்றத்தில் இன்று 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கும் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.3.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 92.50-க்கும் கிலோவுக்கு ரூ.3100 குறைந்து பார் வெள்ளி ரூ.92,500-க்கு விற்கப்படுகிறது.

பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News