தமிழ்நாடு
நீங்கள் 10 ஆயிரம் என்றால் நாங்கள் 20 ஆயிரம்: அண்ணாமலைக்கு போட்டியாக கே.எஸ் அழகிரி
- கொடியேற்றுவதும், போராட்டம் நடத்துவதுமாக போய்க்கொண்டிருக்கிறது.
- மாவட்ட தலைவர்களை அழைத்து வரக்கூடிய 28-ந் தேதி ஆலோசனையும் நடத்த உள்ளார்.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே கட்சி கொடி கம்பத்தை போலீசார் அகற்றியதால் தமிழகம் முழுவதும் 100 நாட்களில் பத்தாயிரம் கொடிகள் ஏற்றப்படும் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.
அதன்படி ஆங்காங்கு கொடியேற்றுவதும், போராட்டம் நடத்துவதுமாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு வகையில் பா.ஜனதாவுக்கு அரசியல் செய்ய கை கொடுத்திருக்கிறது என்பது உண்மை.
அதே நேரம் தேசிய கட்சியான பா.ஜனதா இப்படி அதிரடி காட்டும்போது தேசிய கட்சியான நாமும் அதிரடி காட்ட வேண்டுமே என்று காங்கிரசுக்கும் திடீரென்று ஆவேசம் வந்திருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ஒரு தொகுதிக்கு 100 கொடி வீதம்234 தொகுதிகளிலும் 23,400 கொடிகள் ஏற்ற கே.எஸ். அழகிரியும் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட தலைவர்களை அழைத்து வரக்கூடிய 28-ந் தேதி ஆலோசனையும் நடத்த உள்ளார்.