தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
- தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையின் தீவிரம் குறையும்.
- தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்ததை அடுத்து, தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையின் தீவிரம் குறையும். இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.