தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்- அரசு ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2022-12-13 07:31 GMT   |   Update On 2022-12-13 07:31 GMT
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது.
  • ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. 

சென்னை:

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.

மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதனை நல்ல முறையில் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது.

இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. 

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 2017-ம் ஆண்டு தெரிவித்த அதே சட்டத்திட்டம் படி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News