சேலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை 1200 ரூபாயாக உயர்வு
- கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பூக்கள் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்கள் தேவை அதிகரித்தது.
மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களின் வரத்து மார்க்கெட்டுக்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல நேற்று 600 ரூபாயாக இருந்த முல்லைப்பூ இன்று 800 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற ஜாதி மல்லி 360 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற காக்கட்டான் 500 ரூபாய்க்கும், 140 ரூபாய்க்கு விற்ற நந்தியாவட்டம் இன்று 500 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி 140 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.