தமிழ்நாடு (Tamil Nadu)

மீனவ பெண்களுக்கு அரசு அடையாள அட்டையை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- கனிமொழி எம்.பி. பேட்டி

Published On 2023-02-16 04:55 GMT   |   Update On 2023-02-16 04:55 GMT
  • அரசு எந்திரத்தை வைத்து வழக்கு தொடருவது, மிரட்டுவது என்பது தொடர்ந்து நடந்து வரக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.
  • எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை தவறான முறையில் பாய்கிறது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரிய இயற்கை கடல் பாசி எடுக்கும் மீனவ பெண்களுக்கு தனித்துவ அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க, கூட்டணி வேட்பாளரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவு பெற்றவருமான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்கக்கூடிய ஊடகங்களை அச்சுறுத்தும் விதமாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை பயன்படுத்தி மிரட்டி, அவர்கள் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அரசு எந்திரத்தை வைத்து வழக்கு தொடருவது, மிரட்டுவது என்பது தொடர்ந்து நடந்து வரக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை தவறான முறையில் பாய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News