தமிழ்நாடு

கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதிகளை செய்யுங்கள்- பழனிசாமி

Published On 2024-02-10 10:31 GMT   |   Update On 2024-02-10 10:33 GMT
  • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பயணிகளின் தேவையை அறிந்து தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
  • கிளாம்பாக்கம் பேருந்து முனைய பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே அவசரம் கதியில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய முனையம் கட்டப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இங்கிருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம் பேந்து முனையத்திற்கு வரும் பயணிகளின் தேவையை அறிந்து தேவையான வசதிகள் ஒவ்வொன்றாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எதிர்க்காட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிளாம்பாக்கம் பேருந்து முனைய பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிளாம்பாக்க பேருந்து முனையத்திற்கு அதிகளவில் நகர பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து முனையத்திற்குள் ஏடிஎம், உணவகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

கிளாம்பாக்கம் முனையத்தில் அடிப்படை வசதிகளை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News