பிரதமர் மோடியின் திருச்சி, ராமேசுவரம் பயணம்- ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்ட வழக்கறிஞர்
- சாதாரண பொதுமக்களும் கோவில்களுக்குச் செல்ல இதுபோல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா?
- பிரதமரின் போக்குவரத்து செலவு குறித்து விளக்கம் தர வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19, 20 மற்றும் 21-ந்தேதிகளில் 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். முதல் நாளில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மறுநாள் திருச்சிக்கு சென்றார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மறுநாள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அக்னி தீர்த்தத்தில் நீராடி சிறப்பு வழிபாடு செய்து இருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் திருச்சி, ராமேசுவரம் பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அலுவல் ரீதியானதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
* பிரதமரின் பயணம் தனிப்பட்ட முறையிலானது என்றால் அவர் பயணித்த விமானம், ஹெலிகாப்டர், கார்களுக்கான செலவுகளை மத்திய அரசு செய்ததா?
* தனிப்பட்ட பயணமாக இருந்தால், போக்குவரத்து செலவுகளை பிரதமரிடம் இருந்து வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளதா?
* தனிப்பட்ட பயணம் என்றால் எந்த கட்டணமும் செலுத்தாமல் அரசு வாகனங்களை எந்த விதிகளின் கீழ் பிரதமர் பயன்படுத்தினார்?
* சாதாரண பொதுமக்களும் கோவில்களுக்குச் செல்ல இதுபோல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா?
* பிரதமரின் போக்குவரத்து செலவு குறித்து விளக்கம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.