தமிழ்நாடு

காக்கா, கழுகு கதையால் எந்த பிரயோஜனமும் இல்லை: லெஜண்ட் சரவணன்

Published On 2023-11-19 11:28 GMT   |   Update On 2023-11-19 11:36 GMT
  • ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு அதில் உள்ள உண்மைத்தனமும், கடினமான உழைப்பும் மிக முக்கியமானதாகும்.
  • இன்றைய மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்னை கே.கே.நகரில் 2 கிரவுண்ட் பரப்பளவில் ரூ.6 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரபல தொழில் அதிபர் லெஜண்ட் சரவணன் கூறியிருப்பதாவது:-

எந்த ஒரு நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் மிகவும் வலிமை மிக்கதாக இருக்கும்.

ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் வியாபாரத்துறை மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு அதில் உள்ள உண்மைத்தனமும், கடினமான உழைப்பும் மிக முக்கியமானதாகும்.

இன்றைய மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் அதில் காக்கா, கழுகு கதைகள், இவருக்கு இந்த பட்டம், அவருக்கு அந்த பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டும் தான் உயர முடியும். நாம் உயரந்தால் மட்டும்தான் நாடும் உயரும் என்று கூறினார்.

Tags:    

Similar News