தமிழ்நாடு

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு 25-ந்தேதி தரவரிசை பட்டியல்

Published On 2022-08-21 05:35 GMT   |   Update On 2022-08-21 05:35 GMT
  • மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு 63,859 பேரும், டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கு 14,628 பேரும், டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கு 8510 பேரும், டிப்ளமோ கண் மருத்துவ படிப்புக்கு 1658 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
  • இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது.

சென்னை:

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பட்டபடிப்புகள், டிப்ளமோ நர்சிங், இதர டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கான இணையதளம் வழியாக கடந்த 1-ந்தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

பட்ட படிப்புகளில் 2536 இடங்களிலும், டிப்ளமோ நர்சிங்கில் 2060 இடங்களிலும், இதர டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் 8596 இடங்களும் அரசு கல்லூரிகளில் உள்ளன.

இதுதவிர தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 12-ந் தேதி கடைசி நாளாகும்.

மொத்தம் 97,839 பேர் பதிவு செய்துள்ளனர். 87,764 பேர் விண்ணப்பங்களை சமர்பித்தனர். 52,036 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். 38,471 பேருக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு 63,859 பேரும், டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கு 14,628 பேரும், டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கு 8510 பேரும், டிப்ளமோ கண் மருத்துவ படிப்புக்கு 1658 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து 25-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்பின்னர் ரேங்க் பட்டியலின்படி ஆன்லைன் வழியாக கலந்தாய்வு தொடங்கும். 28-ந் தேதி முதல் ஒரு வாரம் வரை ஆன்லைன் வழியாக கல்லூரிகளை தேர்வு செய்வார்கள் என்று மருத்துவ கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News