உலக முதலீட்டாளர்கள் மாநாடு... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு
- மாநாட்டில் 30 ஆயிரத்துக்கம் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செம்கார்ப், டாடா பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலக முதலீட்டாளர் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்கள் நடைபெற உள்ளது.
மாநாட்டில் 30 ஆயிரத்துக்கம் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு பிரதிநிதிகள் 450-க்கும் மேற்பட்டோர் பங்கு பெறுகின்றனர்.
மாநாடு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஓசூரில் 7000 கோடி ரூபாய் அளவுக்கு டாடா நிறுவனம் முதலீடு செய்கிறது. இதனால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செம்கார்ப், டாடா பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது. கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், மாவட்டங்களில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைய உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநாட்டில் கையெழுத்தாகிறது.