தமிழ்நாடு

மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு

Published On 2023-07-16 05:02 GMT   |   Update On 2023-07-16 05:02 GMT
  • வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது.
  • வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது.

கூடலூர்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. கேரள மாநிலத்தில் கனமழை பெய்தபோதும் முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்து அணைப்பகுதியில் மழை பெய்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 120 அடியை எட்டியது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.90 அடியாக உள்ளது. 301 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது. வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 29.04அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News