தமிழ்நாடு

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2023-04-07 07:36 GMT   |   Update On 2023-04-07 07:36 GMT
  • தமிழ்நாட்டு மக்கள் மிகவும் சாமார்த்தியமாக தீர்ப்பு வழங்கக் கூடியவர்கள்.
  • பொதுச் செயலாளரை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அவர்களே அறிவித்துக் கொண்டார்கள்.

சென்னை:

ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் சாமார்த்தியமாக தீர்ப்பு வழங்கக் கூடியவர்கள். எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்ல வருகிற 24-ந்தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடக்கிறது.

அதன் பிறகு மாவட்டம் தோறும் ஒருங்கிணைப்பாளர் சென்று மக்களை சந்திப்பார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

அ.தி.மு.க. அரசியல் மாயையில் சிக்கியுள்ளது. இந்த மாயை மக்கள் மன்றத்துக்கு சென்றால் விலகும். தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே இருக்கிறது.

இன்று பொதுச் செயலாளரை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அவர்களே அறிவித்துக் கொண்டார்கள். இது கழகத்தின் சட்ட விதிக்கு புறம்பானது.

இந்த உலகம் உள்ளவரை அ.தி.மு.க. இருக்கும். அதன் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதான் என்று ஏற்கனவே நடந்த பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. எதிர் காலத்தில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.

அ.தி.மு.க. பிளவு பட்டு விடக்கூடாது என்பதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை வாபஸ் பெற்றோம். அ.தி.மு.க.வில் கூட்டப்படும் செயற்குழு கூட்டம் சட்ட விரோதமானது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News