சசிகலா முதலமைச்சராக முயன்றார்... எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி... திண்டுக்கல் சீனிவாசனின் அடுத்த சரவெடி
- அடுத்த நாள் காலையில் சசிகலாவுக்கு 4 வருட சிறை-ன்னு வருது.
- முதலமைச்சரா இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா பண்ண சொல்லி கையெழுத்து வாங்குனது டிடிவி தினகரன்.
திருவாரூர்:
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின் பேரில் அம்மா முதலமைச்சர் ஆனார். அவருக்கு பிறகு யார் முதலமைச்சர் என்று பார்க்கும் போது சசிகலா அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு எல்லாம் திட்டம் போட்டுன்னு இருக்காங்க. நாங்க எல்லாம் எம்.எல்.ஏ.வாக இருக்குறோம். நாளை மறுநாள் முதலமைச்சர் ஆகப்போவதாக சசிகலா சொல்றாங்க. அடுத்த நாள் காலையில் சசிகலாவுக்கு 4 வருட சிறை-ன்னு வருது.
நீங்க பாருங்க.. கடவுள் யாருக்கு அருள் தருகிறார் என்று. அவங்களாவே திட்டம் போட்டு அவங்களாவே முதலமைச்சர் ஆகப்போறேன்னாங்க. அப்போ நாங்க என்னப்பா மறுபடியும் இந்த குடும்பத்துக்கிட்ட மாட்டிக்கிட்டுறது கட்சின்னு பேசிக்கிட்டு இருந்தோம். தெய்வம் இருக்கிறது அன்றைக்கு காட்டியது.
அப்போ முதலமைச்சரா இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா பண்ண சொல்லி கையெழுத்து வாங்குனது டிடிவி தினகரன். நாங்க எல்லாம் உட்கார்ந்துன்னு இருக்கோம். அப்போ பன்னீர்செல்வம் சொல்றாரு, பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்து இருக்கீங்க.. உங்களுக்கு தண்டனை உண்டுன்னு சொல்றார். இவருக்கு துரோகம் பண்ணது தினகரன். இவர பதவியில் இருந்து எடுத்தது அந்த குடும்பம். நமக்கு என்ன இருக்கிறது துரோகம். ஒண்ணுமே கிடையாது.
அம்மாவே அமைச்சர்களின் ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை அப்போதே நிருபித்தார். அந்த விதி அவர் முதலமைச்சர் ஆவதற்கு என்பது அப்போது தான் தெரிந்தது. அத்தனை பேர் ஒருமனதாக அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம். 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் விலைவாசி ஏறவில்லை. சட்டம் ஒழுங்கு கெடவில்லை. சூப்பர் ஆட்சி ... ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்தார்.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.