உதயநிதி புகழ் பரப்பும் 'மாமன்னா' பிரசார பாடல்- தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்
- மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.
- பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாள் விழாவை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 1 மாதம் விளையாட்டு போட்டிகள் நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்து உள்ளார்.
இதையொட்டி நேற்று ஆலந்தூரில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை பரிசாக வழங்கினார்.
இதன் பிறகு தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழ்பாடும் 'மாமன்னா' பிரசார பாடலையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.
பம்மல் நகர இளைஞரணி நிர்வாகி ராஜசேகர் உருவாக்கிய இந்த பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த பாடலை வெளியிட்டதும் வாட்ஸ்-அப், யூ டியூப்பில் மாமன்னா பாடல் வைரலானது.