தமிழ்நாடு

அஞ்சல் துறை சார்பில் தமிழகத்தில் 50 நகரங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம்- அதிகாரி தகவல்

Published On 2023-08-29 07:19 GMT   |   Update On 2023-08-29 07:19 GMT
  • அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார்.
  • 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல்துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடங்கப்பட்டு இருப்பது குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல்துறையின் வெளிநாட்டு வர்த்தகப்பிரிவு இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார். அஞ்சல்துறை தலைவர் பி.பி.ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்கொரியாவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய பார்சலை பெற்றுக்கொண்டு அதற்குரிய ரசீது வழங்கினார். அஞ்சல்துறைத் தலைவர் ஜி.நடராஜன் பேசும்போது, தமிழகத்தில் 50 நகரங்களில் அஞ்சல்துறை ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல்துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

Tags:    

Similar News