ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் நாளை முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்
- வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும்.
- துறை சார்ந்த அதிகாரிகளோ கோப்புகளை இறுதி செய்யும் பணிகளை அரசு முன்னெடுக்க தாமதமாவதாக தெரிவிக்கின்றனர்.
சென்னை:
உரிமைக் குரல் ஓட்டுனர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹீர் உசைன் கூறியதாவது:-
ஓலா, ஊபர் செயலிகள்(ஆப்) வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும். வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் உரிமம் பெற வேண்டாம் என்ற அமைச்சரின் சட்டசபை அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் துறை சார்ந்த அதிகாரிகளோ கோப்புகளை இறுதி செய்யும் பணிகளை அரசு முன்னெடுக்க தாமதமாவதாக தெரிவிக்கின்றனர். எனவே, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 16-ந் தேதி (நாளை) முதல் 3 நாட்களுக்குத் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்" என்றார்.