குழாய் மூலமாக தண்ணீரே வராத நிலையில், எப்படி எரிவாயு வரும்? பாஜக தேர்தல் அறிக்கையை விமர்சித்த ப. சிதம்பரம்
- பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
- குழாய் மூலமாக எரிவாயு என்பது வேடிக்கையான அறிவிப்பு.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது:-
* பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
* 5 கோடி மக்கள் மட்டுமே வறுமையில் இருப்பதாக நிதி அயோக் கூறும் நிலையில், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் ஏன்?
* குழாய் மூலமாக தண்ணீரே வராத நிலையில், எப்படி எரிவாயு வரும்.
* குழாய் மூலமாக எரிவாயு என்பது வேடிக்கையான அறிவிப்பு.
* உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பயன்பாடு 3.7 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது.
* எரிவாயு விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வாங்க தயங்குகிறார்கள்.
* பா.ஜ.க. அரசு 4 கோடி வீடுகளைக் கட்டிக்கொடுத்துவிட்டதாகத் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு.
* 4 கோடி வீடுகளைக் கட்டி இருந்தால் 52,000 வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு கட்டிக்கொடுத்த 52,000 வீடுகளைக் காட்ட முடியுமா?"
* அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரெயில் இயக்கப்படும் என்ற பா.ஜ.க. வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரெயிலுக்கு ரூ.1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பா.ஜ.க. அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.