தமிழ்நாடு (Tamil Nadu)

திருவள்ளூர் அருகே குடி தண்ணீர் குழாய் உடைப்பால் கழிவுநீர் கலக்கும் அபாயம்

Published On 2023-11-14 07:03 GMT   |   Update On 2023-11-14 07:03 GMT
  • கடந்த ஒரு மாதமாக சேதம் அடைந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.
  • பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த காக்களூர் ஊராட்சிக்கு திருவள்ளூர் ஹம்சா நகர் ஏரியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இதற்காக தனி பைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் திருவள்ளூர் பத்தியால் பேட்டை பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக சேதம் அடைந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.

இதுகுறித்து காக்களூர் பொதுமக்கள் ஊராட்சி மற்றும் அதிகாரிகளும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை குடிநீர் குழாய் இணைப்பு மாற்றப்படவில்லை.

இதனால் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News