ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்... தாம்பரம் ரெயில்வே கேண்டீன் உரிமையாளருக்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி போலீசார்
- 15-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
- சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம் நான்கு கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் முதலில் கைதான 4 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி எஸ்.ஆர் சேகர், நீல முரளியாதவ், தொழிலபதிர் முருகன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம் நான்கு கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது. தனது உதவியாளர் மூலம் பணத்தை நகைக்கடை உரிமையாளர் கொடுத்தாக கூறப்படும் நிலையில், நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர்.
இதனிடையே, தாம்பரம் ரெயில்வே கேண்டீன் உரிமையாளர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.