பாஸ் கொடுத்தவர் உள்ளே! - இதுதான் பா.ஜ.க.-வின் பாராளுமன்ற மரபு
- பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
- பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
சென்னை:
பாராளுமன்றம் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சுப்பராயன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே!
பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
அவையில் மட்டுமல்ல..
பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம்.
இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 15, 2023
பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
அவையில் மட்டுமல்ல..
பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும்… pic.twitter.com/sFoQFl7kqV