தமிழ்நாடு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
- முதலமைச்சரின் ஆலோசனை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை.
- கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசியலிலும், மாநில அரசு நிர்வாகத்திலும் தலையிடும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சென்னை:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ததற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல். முதலமைச்சரின் ஆலோசனை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை.
கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசியலிலும், மாநில அரசு நிர்வாகத்திலும் தலையிடும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான மூர்க்கத்தனமான நடவடிக்கையை நிறுத்தி வைத்தாலும், அவர் கவர்னர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை தெளிவாக காட்டுகிறது. அவரை உடனடியாக ஜனாதிபதி திரும்ப அழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.