தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...
- தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
- 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இயற்கை வள மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு
மீன்தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம்
பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு
வேளாண்துறைக்கு மட்டும் மொத்தம் ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு
பவர் டில்லர்களின் மானியத் தொகை ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
வேளாண் இயந்திரங்களைப் பரவலாக்குவதற்கான தொழில்நுட்பக் கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
கூட்டுறவு பயிரிக்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தானியங்கி மின்னணு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12,000 விவசாயிகளுக்கு மானியம்- பட்ஜெட்டில் அறிவிப்பு
100 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் கட்டமைப்பு வசதிகளைப் புதுப்பிக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு