தமிழக பட்ஜெட்... மத்திய அரசை சாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு
- மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகிறது.
- தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.
சென்னை :
2024-2025ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கினார். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். அப்போது அவரது உரையில்,
ஜிஎஸ்டி-யால் ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கு 20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு காலதாமதம் செய்வதால், தமிழ்நாடு அரசுக்கு ரூ.9,000 கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் சூழலும் உள்ளது.
மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகிறது.
தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.
அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை ரூ.1,08,690 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.46 சதவீதம். கடும் சவால்களுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை அரசு குறைத்துள்ளது.
ஏற்றுமதி, மின்னணு பொருட்கள், மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலம். தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி அரசு பயணிக்கும் என்பதை உணர்த்தும் பட்ஜெட் என கூறினார்.