தமிழ்நாடு
உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது உயிரிழப்பு- நிவாரணத் தொகையை உயர்த்தியது தமிழக அரசு
- நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத வகையில் உயிரிழக்கும் மற்றும் காயமடையும் பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
அதன்படி, குண்டுவெடிப்பு தாக்குதல், சமூக விரோத தாக்குதல் போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிற காரணங்களால் உயிரிழப்பவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்வு.
நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.