தமிழ்நாடு

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-10-05 04:59 GMT   |   Update On 2022-10-05 04:59 GMT
  • சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.
  • ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்காட்டுக்கு கார், வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ஆரஞ்சு பழ தோட்டம், காபி தோட்டம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையின் அழகை கண்டு ரசிக்கின்றனர்.

ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைகின்றனர். அதுபோல் கிளியூர் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை தினமும் அதிகரித்தப்படி உள்ளதால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன.

Similar News