தமிழ்நாடு

பாலியல் தொல்லை வழக்கில் சிறுமிக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் நிவாரணத்தை சுருட்டிய தாய்மாமன்

Published On 2023-12-01 07:41 GMT   |   Update On 2023-12-01 07:41 GMT
  • குற்றச்சாட்டின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • தாய்மாமன் மீது மோசடி உள்ளிட்ட 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வில்லிவாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு போடப்பட்ட வழக்கில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த பணம் சிறுமியின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த பணத்தை சிறுமியின் தாய் மாமனான சந்தோஷ் என்பவர் சுருட்டி ஏமாற்றியுள்ளார்.

இதுபற்றி கேட்டபோது, தனது சகோதரி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை வீட்டை விட்டு விரட்டி உள்ளார். இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் சந்தோசை போலீசார் கைது செய்தனர். மோசடி உள்ளிட்ட 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News