தமிழ்நாடு

ஒருவாரத்தில் 5 அடி குறைந்த வைகை அணை நீர்மட்டம்

Published On 2023-05-06 06:37 GMT   |   Update On 2023-05-06 06:37 GMT
  • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 117.20 அடியாக உள்ளது. 204 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்த அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கோடைமழை ஓரளவு கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது.

மதுரை சித்திரை திருவிழாவிற்காக வருடந்தோறும் மே மாதத்தில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதன்படி கடந்த வாரம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்நாள் 750 கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக குறைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 500 கனஅடி, 822 கனஅடிநீர் என உயர்த்தப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறப்பால் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 5 அடி குறைந்துள்ளது.

கடந்தவாரம் 57 அடியாக இருந்த நீர்மட்டம் இன்றுகாலை 52.46 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 125 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 117.20 அடியாக உள்ளது. 204 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 86.59 அடியாக உள்ளது. 12 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் 0.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News