ஆசிரியர்கள் போராட்டம் நாளை முதல் தீவிரம்
- கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்களில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரியா்கள் புகாா் தெரிவித்தனா்.
- தமிழகம் முழுவதும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை:
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தியும், சம வேலைக்கு சம ஊதியம் கோரியும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியா்கள் சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் கடந்த 19-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் நடை பெற்று வரும் இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.
நேற்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது இடைநிலை ஆசிரியா்களை போலீசார் கைது செய்தனா். அவா்களை 2 மணி நேரத்துக்கும் மேலாக, போலீஸ் வாகனத்திலேயே வைத்து பல்வேறு இடங்களில் சுற்றி அலைக்கழித்ததாகவும், கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்க ளில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரி யா்கள் புகாா் தெரிவித்தனா்.
மேலும், போலீசார் தாக்கியதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சோ்ந்த கலிய மூா்த்தி என்பவா் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று ஆசிரியர்கள் போராட்டம் 7-வது நாளாக நீடிக்கிறது.
இந்நிலையில் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை நாளை முதல் தீவிரப்படுத்த உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது:-
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இதுவரை சென்னையில் மட்டும் போராட்டம் நடத்தி வருகிறோம். முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். நாளை முதல் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.
நாங்கள் நீண்டகாலமாக எங்களின் உரிமைகளை இழந்து வருகிறோம். இது தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோர் நட வடிக்கை எடுக்கவில்லை. இதனால் பல்லாயிரக்க ணக்கான ஆசிரியர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காமல் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.