திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.20 கோடி வசூல்
- அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.
- வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.
அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டனர்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது உண்டியல் எண்ணிக்கையில் ரூ.3 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 501 ரூபாயும், தங்கம் 1 கிலோ 860 கிராம், வெள்ளி 24 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
பொதுமக்கள் சார்பில் வேலாண்டி, மோகன் ஆகி யோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.