தமிழ்நாடு (Tamil Nadu)

கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்- தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் மடல்

Published On 2024-08-04 15:41 GMT   |   Update On 2024-08-04 15:41 GMT
  • கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.
  • அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.

மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சித்தலைவர்கள், பொது மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கருணாநிதியின் நினைவு நாளையொட்டி வரும் 7ம் தேதி திமுக அமைதிப் பேரணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை அண்ணாசாலையில் இருந்து கடற்கரை வரை நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெறுகிறது.

அன்றைய தினம் காலை 7 மணிக்கு அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.

அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.

கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

Tags:    

Similar News