தமிழ்நாடு
5 பேர் உயிரிழப்பு- தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது: எல்.முருகன்
- சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்கது.
- தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை என்பதை தெரிவித்த கனிமொழி பதிவை வரவேற்கிறேன்.
சென்னை:
சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்கது.
* விமானப்படை அதிகாரிகள் சொன்னதைப்போல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.
* தமிழக காவல்துறை முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சரியான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால் இதுபோன்ற விளைவு ஏற்பட்டுள்ளது.
* தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை என்பதை தெரிவித்த கனிமொழி பதிவை வரவேற்கிறேன் என்று கூறினார்.